Thursday, January 21, 2010

கை மரு‌ந்தாகு‌ம் இ‌‌ஞ்‌சி

கை மரு‌ந்தாகு‌ம் இ‌‌ஞ்‌சி

Saturday, January 9, 2010

முருங்கை சில குறிப்புகள்

நல்ல பச்சையாக உள்ள முருங்கைக்காயை எடுத்துக் கொண்டு அதனை சாறாக்கி, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.

சிலருக்கு கழுத்து வலி ஒரு பிரச்சனையாக இருந்து வரும். இவர்கள் தினந்தோறும், முருங்கை கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் நாளடைவில் கழுத்து வலி குறையும்.

முருங்கை கீரையில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, கால்சியம் சத்துகள் உள்ளன.

பயனுள்ள உடல் நலக் குறிப்புகள்

ரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் மட்டுமல்லாது, உடல் சோர்வு, தலைவலி, தலைச் சுற்றல் ஆகியவை உள்ளவர்கள் ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி ஜீரகத்தைப் போட்டு அதனை கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சாப்பிடவேண்டும். இதனை தினம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

வாய் துர் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய வழியை பின்பற்றி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றில் சுடுநீரைக் கலந்து உப்புப் போட்டு குடித்தாஅல் போதும்.

தினசரி உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், ஜீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் ஜீரணப்பிரச்சனை, வாயுத்தொல்லை வராது.

ஜாதிக்காய் நலக்குறிப்புகள்

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

அதேபோல் ஜாதிக்காயைன் சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

அதே போல் அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிர்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்த...

மன அழுத்தம், டென்ஷனாக இருக்கும்போது புத்தகத்தைப் படித்து பலர் அதிலிருந்து விடுபமுயல்கின்றனர். நூல்களைப் படிக்கும் போது அதிலேயே மனம் ஆழ்ந்து விடுவதால் கவனசசிதறல் ஏற்பட வாய்ப்பில்லை.

தொடர்ந்து 6 நிமிடங்கள் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மன அழுத்தம் படிப்படியாகக் குறைகிறது. படிக்கும்போது இதயம், தசைகளில் ஏற்படும் படபடப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பநிலை ஏற்படுகிறது.

புத்தகம் படிப்பதால் 68 சதவீதம் மன அழுத்தம் குறைகிறது. இசையைக் கேட்பதன் மூலம் 61 சதவீதமும், தேநீரஅருந்துவதால் 54 சதவீதமும் மன அழுத்தம் குறைவதாக, அவர் மேலுமகூறியுள்ளார்.

மேலும் மன அழுத்தங்களின் போது ஏதாவது 'லைட்' விளையாட்டுகளில் ஈடுபடலாம்.