Saturday, January 9, 2010

ஜாதிக்காய் நலக்குறிப்புகள்

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

அதேபோல் ஜாதிக்காயைன் சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

அதே போல் அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிர்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

No comments: